fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவில் நிர்க்கதியாகிருந்த 266 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2020 13:43

ரஷ்யாவில் நிர்க்கதியாகிருந்த 266 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள், சிறப்பு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு வருகை தந்த அனைவரும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை அவர்கள் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்களில் பெரும்பாலோர், உயர்கல்விக்காக சென்ற இலங்கை மாணவர்களாவர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2020 13:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo