பொதுத் தேர்தலின் பின்னர் புரட்சிகரமான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய அனைத்து துறைகளும் உள்ளடங்கும் விதத்தில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயம், கைத்தொழில், சேவைத்துறை மற்றும் ஏனைய துறைகள் தொடர்பில் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தும் விதத்தில் வரவு செலவுத்திட்டம் அமையும். ஒவ்வொரு துறைசார் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இதனால் புரட்சிகரமான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் கலாநிதி பந்துல குணரட்ன தெரிவித்தார்.

தேர்தலின் பின்னர் புரட்சிகரமான வரவு செலவுத்திட்டம்..
படிக்க 0 நிமிடங்கள்