தபால் வாக்குச்சீட்டு உட்பட பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்றைய தினத்திற்குள் நிறைவு செய்யப்படுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 98 வீதமான விநியோகம் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 7 இலட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்று நிறைவடையும். எஞ்சியுள்ள பொதிகள் உரிய அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்படும். தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்றதும் பாதுகாப்பாக பொதிசெய்யப்பட்ட பொதிகள் மீண்டும் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். அவற்றை பெற்றுக்கொள்ள தயாராகவிருப்பதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

தபால் வாக்குச்சீட்டு உட்பட பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்றைய தினத்திற்குள் நிறைவு
படிக்க 0 நிமிடங்கள்