நாட்டு மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதை தடுக்க முடியுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவு, பாதுகாப்பு பிரிவு. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் உரிய தீர்மானம் எட்டப்பட வேண்டும். தற்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டு மக்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : வைத்திய அதிகாரிகள் சங்கம்
படிக்க 0 நிமிடங்கள்