பொதுமக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்குகளை பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை. பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க முடியுமேன அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையான சுகாதார செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை பெற்ற ஒவ்வொரு பிரஜையும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும். கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி எவரும் வாக்களிப்பதை தவிர்க்க கூடாது.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எவ்வித அச்சமும் இன்றை வாக்களிப்பு மததிய நிலையங்களுக்கு வருகை தரமுடியும். வாக்களிக்க தவறுவது ஜனநாயகத்திற்கு பாதிப்பாக அமையுமெனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.