கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 196 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நேற்று அடையாளம் காணப்பட்ட 56 பேருடன் இம்மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 252ஆக அதிகரித்துள்ளது.
போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்கும் கந்தகாடு மத்திய நிலையத்தில் இருந்து வெலிகட சிறைச்சாலைக்கு அனுப்பிய கைதியொருவர் கொவிட் 19 தொற்றாளராக அண்மையில் இனங்காணப்பட்டார். இதற்கமைய சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் ஊழியர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 338 பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைய இன்றைய தினத்தில் 196 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் கந்தகாடு மத்திய நிலையத்தில் மேலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதன் அறிகுறிகள் தென்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்ற கைதிகளும் அவர்களை அண்டியவர்களையும் இனங்கண்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கமைய இம்மத்திய நிலையத்தில் இருந்து சமூகத்துக்கு இவ்வைரஸ் தொற்றுவதை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்ட்டு வருவதாக சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையையடுத்து அம்மத்திய நிலையத்தின் அருகாமையில் உள்ள கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை வைத்தியசாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று அடையாளம் காணப்பட்ட பெண் ஆலோசகரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர் தொடர்பு வைத்திருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன் விடுமுறையில் சென்ற எட்டு ஆலோசகர்களையும் உடனடியாக மீண்டும் சேவைக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்படுகின்றவர்களை சந்திப்பதற்காக வருகை தந்தவர்களும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்மத்திய நிலையத்தில் உள்ள 66 ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு என மின்னேரியா கட்டுகெலியாவ இராணுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு என தமது சேவைகளை வழங்கும் இராணுவ அதிகாரிகள் ஆவர்.
வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை அவ்வாறே பேணுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களை கேட்டுள்ளனர். விசேடமாக கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையையடுத்து முழு சமூகமும் அதுகுறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்;.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/New-Corona-Persons-page-001.jpg”]