fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுஜன முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கொழும்பிற்கு..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2020 19:13

கொழும்பு மாவட்ட பொதுஜன முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யர்பட்ட பல பொது கூட்டங்களில் ஜனாதிபதி கோட்ட்பய ராஜபக்ஷ இன்று கலந்து கொண்டார்.

எதிர்வரும் பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளரும் பிரதமரின் ஊடக பேச்சாளருமான சட்டதரணி சி.பிரேமநாத் சி தொவத்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பொதுகூட்டம் கொழும்பு ஹைட் மைதானத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மகாசங்கத்தினர் முன்னாள் பிரதம நீதியரசர் சரன் என்.சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி விகாரமாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் திலங்க சுமத்திபாலவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி கூடியிருந்த மக்களுடன் நட்புறவு ரீதியாக உரையானடினார்.

மட்டக்குளி தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் அநுர பெர்ணான்டோவின் வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டம் மட்டக்ககுளி காக்கைதீவில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி கலந்து கொண்டார். சர்வமத தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர். கொழும்பு கிழக்கு மகவத்த ஐக்கிய விளையாட்டுகழக மைதானத்தில் மற்றொரு கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் சுசில் பிரேமஜயந்தின் வெற்றipய உறுதிப்படுத்துவதற்காக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுடன் ஜனாதிபதி உரையாடினார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2020 19:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க