யாழில் ஒருவரை வாளால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக அறுவர் கைது
Related Articles
யாழ் கச்சேரிக்கு முன்னாள் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை வாளால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிலிள் பயணித்த நபரை மேலும் பல மோட்டார் சைக்கிலிள் வந்த சிலர் நேற்று தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ். குற்றபுலனாய்வு அதிகாரிகள் குழுவும் சிசிடிவி காட்சிகளை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களை விசாரணைக்குட்படுத்திய போது நீர்வேலி பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைத்திருந்த 3 மோட்டார் சைக்கில்கள் 2 வாள்கள் கைக்குணண்டு ஒன்று உட்பட மேலும் பல ஆயுதங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.