அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை தாண்டியுள்ளது. கொவிட் 19 தொற்று பரவியதையடுத்து ஒரு நாளில் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதி கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் பதிவாகியது. 61 ஆயிரத்து 334 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டனர்.