பொருளாதாரத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கிலேயே பொது மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. மத்திய வங்கி கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி மீது குற்றஞ்சுமத்துவது வேடிக்கைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
(மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாவை வழங்க முற்படும் போது பாலர் பாடசாலை அரசியல் என எமக்கு கூறுகின்றனர். ஆனால் மத்திய வங்கியை கொள்ளையிட்ட போது அது எப்பாடசாலைக்குரிய விடயமாகும். மத்திய வங்கியை சூறையாடி பாரிய பணத்தை வீடுகளுக்கு எடுத்தச் சென்ற போது அது எவ்வகையிலான அரசியல் நடவடிக்கையாகும். நண்பர்களே இது அரசியல் ரீதியிலான குரோதமும் பொறாமையுமாகும். மனிதர்கள் முன்னேறுவதை விரும்புவதில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதுவே யதார்த்தமாகும். இவ்வாறான ஒரு நிலைமையில் என்ன செய்ய வேண்டும் பொருளாதாரத்திற்கு பணத்தை ஈர்க்கச் செய்ய வேண்டும். நாம் 20 ஆயிரத்தை வழங்குவதும் பொருளாதாரத்திற்கு பணத்தை ஈர்க்கவேயாகும். )