fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் பட்டியலுக்காக உயர்ந்தபட்ச நிவாரணத்தை வழங்க அமைச்சரவை தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 18:28

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் பட்டியலுக்காக உயர்ந்தபட்ச நிவாரணத்தை வழங்க அமைச்சரவை தீர்மானம்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் பட்டியலுக்காக உயர்ந்தபட்ச நிவாரணத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மின் கட்டணத்தில் ஒரு தொகையை அரசாங்கம் செலுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார். மின் பட்டியல் தொடர்பில் தீர்மானிக்க ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினர் நேற்றைய தினம் தமது அறிக்கையை அமைச்சரிடம் வழங்கியிருந்தனர். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அப்பாற் சென்று பொதுமக்களுக்கு உயர்ந்தபட்ச நிவாரணத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். குறைந்த வருமானம் பெறுவோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும். மின் பாவனையாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் தொடர்பிலான அறிக்கை அடுத்த வாரத்திற்குள் நிதி அமைச்சினால் வெளியிடப்படும். மக்கள் வீடுகளில் தங்கியிருந்த போது மின் பாவனை அதிகரித்தது. இதுவே மின்கட்டணம் அதிகரிக்க காரணமாகும். எனினும் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே மக்கள் வீடுகளில் தங்கியிருந்தனர். இதன்காரணமாக மின் பட்டியலுக்கான நிவாரணத்தை அரசாங்கமே வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை பொதுப் போக்குவரத்து சேவைக்கான முற்கொடுப்பனவு அட்டை ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் அறிமுகம் செய்யப்படுமெனவும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார். குறித்த முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தி போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் வண்டிகளிலும் ரயில்களிலும் பயணிக்க முடியும். வர்த்தக பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 18:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க