நாட்டிலுள்ள சகல குடும்பங்களுக்கும் மாதமொன்றிற்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொருளாதாரம் வழமைக்கு திரும்பும் வரை 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எதிர்தரப்பினருடன் பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ளார். எனினும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் விடயத்தில் எதிர் தரப்பினருடன் இணைந்து செயற்படுகின்றார். அமெரிக்காவில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான செயலில் இறங்கியுள்ளன. 2.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர், அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 5 ம் திகதி அமைக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொதுமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமென சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள சகல குடும்பங்களுக்கும் மாதமொன்றிற்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு : சஜித்
படிக்க 1 நிமிடங்கள்