fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 12:46

4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. கொரொனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிரிக்கட் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இறுதியாக சிட்னி மைதானத்தில் அவுஸ்ரேலியா மற்றும நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியே நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் பின்னர், கிரிக்கட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

தற்போது வைரஸ் தாக்கம் ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரிக்கட் போட்டிகள் மீள ஆரம்பமாகின்றன. அதன் முதற்கட்டமாக மேற்கிந்திய கிரிக்கட் தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன் முதற்போட்டி இன்று சவ்த் எண்டனில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கபட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு வீரர்களும் பயிற்சிகளுக்கு முன்னார் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதற்கமைய இன்றைய தினம் ஜெசன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பேன்ஸ் ஸ்டொகஸ்; தலைமையில் இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளனர். 4மாதங்களின் பின்னர் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாகுவதால் இப்போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 12:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo