fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் : அமெரிக்க வெள்ளை மாளிகை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 16:39

இந்திய – சீன எல்லைப்பிரச்சினையின் போது இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே முறுகல் நிலவிவருகின்றது. தென் சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எந்த நாடும் அத்துமீறலில் ஈடுபடுவதை அமெரிக்கா அனுமதிக்காது.

அதன் காரணமாகவே விமானம் தாங்கிக் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உலக நாடுகளிலே வலிமையான இராணுவப் படையை அமெரிக்கா கொண்டுள்ளது. அதை ஏனைய நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டுமென வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 8, 2020 16:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க