சாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்
Related Articles
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் திகதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் வருகிற ஜூலை 24-ந் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள். இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.