கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 888 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் 2 ஆயிரத்து 78 வைரஸ் தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் மரணித்துள்ளனர். அதற்கமைய 112 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 43 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/1955.png”]