fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:43

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய மொத்தமாக 30 இலட்சத்து 40 ஆயிரத்து 833 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 378 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில நேற்றைய தினத்தில் மாத்திரம் 22 ஆயிரத்து 252 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு 467 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதற்கமைய இந்தியாவில் 7 இலட்சத்து 20 ஆயிரத்து 346 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 20 ஆயிரத்து 174 பேர் மரணித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 17 இலட்சத்து 44 ஆயிரத்து 397 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவரிகளில் 5 இலட்சத்து 40 ஆயிரத்து 764 பேர் மரணித்துள்ளனர். 67 இலட்சத்து 40 ஆயிரத்து 96 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo