fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக ஐ. நா. எச்சரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:43

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காட்டு விலங்குகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்காவிடின் இந்நிலை தொடருமெனவும் அறிவுறத்தப்பட்டுள்ளது. இறைச்சிக்கான கேள்வி, சமநிலையற்ற விவசாய நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பனவே கொவிட் 19 உள்ளிட்ட நோய் தொற்றுக்கள் அதிகரிப்பதற்கான காரணமென ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நோய் தொற்றுக்களால் வருடாந்தம் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இபோலா, வெஸ்ட் நில் வைரஸ் (றுநளவ Nடைந எசைரள) மற்றும் சார்ஸ் ஆகியனவும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவிய நோய்களென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo