fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 17 வயது ஆண் மற்றும் 16 வயது பெண் ஒருவரும் குதித்து தற்கொலை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:33

17 வயது ஆண் ஒருவரும் 16 வயது பெண் ஒருவரும் பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை கட்டுகஸ்தொட்ட பகுதியில் வைத்து, நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர். 10 மற்றும் 11 ம் தரங்களில் கல்வி பயிலும் குறித்த இருவரும் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள் அவர்களை தேடி வந்தனர்.

அதற்கமை, குறித்த இருவரும் நவயாலதென்ன ரயில் பாலத்திற்கு அருகில் இருப்பதாக அவர்களது பெற்றோருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து பெற்றோர் அவ்விடத்திற்கு சென்ற போதிலும் குறித்த இருவரும் அவர்கள் வருவதற்கு முன்னரே குறித்த ரயில் பாலத்தில் இருந்து நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க