ஆப்கானிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் சிறய அளவிலான நில நடுக்கம்
Related Articles
ஆப்கானிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் சிறய அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. காபுல் நகரில் இருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பஹ்மன் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 7.5 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்வுக்குள்ளாகியுள்ளன.
எனினும் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் இடம்பெற்று வரும் நிலையில், குண்டு வெடிப்பு தாக்குதல்களையே நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் எண்ணியுள்ளனர். எனினும் நில அதிர்வு நீடித்ததையடுத்து, மக்கள் அச்சமடைந்து வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். எவ்வாறாயினும் அனர்த்தத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சேதங்கள் ஏற்படவில்லையென ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.