fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாஜ்மஹாலை தொடர்ந்தும் மூடுவதற்கான தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2020 13:13

தாஜ்மஹாலை தொடர்ந்தும் மூடுவதற்கான தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மஹாலை 3 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையடுத்து, தாஜ்மஹாலை தொடர்ந்தும் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 25 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் 613 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை காலமும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவை பின் தள்ளி 3ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 6 இலட்சத்து 98 ஆயிரத்து 233 பேர் கொரேனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 703 பேர் தொற்றினால் மரணித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2020 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo