விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு
Related Articles
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, இலங்கைக்கு வருகை தருவோர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் வர்த்தக நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய காலை 8.30 முதல் 3.30 மணி வரை தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும். பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விமான பயண அனுமதி பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான சான்றுதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமென விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.