ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலி
Related Articles
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் வண்டி, லொறியை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில், வேக கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். அவர், ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புயை லொறியுடன் சாராதி கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.