ஜப்பானில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி
Related Articles
ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றமையினால் குமா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. வீடுகள் பல நீரில் முழ்கியுள்ளதோடு, இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களில் சிக்கி 16 பேர் காணமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.