fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் 470 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2020 14:05

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 470 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய நேற்று காலை 06.00 மணிமுதல் இன்று அதிகாலை 05.00 மணிவரை சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 156 பேரும், கஞ்சா போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 105 பேரும், சட்டவிரோத மதுபானத்துடன் 153 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கு மேலதிக அயிஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 24 சந்தேக நபர்களும் ஏனைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 23 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2020 14:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo