fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் – 19 தொற்றினால் 174 பேர் மாத்திரமே சிகிச்சைப்பெற்று வருவதாக சுகாதார பிரிவு தகவல்…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2020 12:59

கொவிட் – 19 தொற்றாளர்கள் 5 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நால்வர் கட்டார் இராச்சியத்திலிருந்தும், ஒருவர் பங்களாதேஷில் இருந்தும் வருகைத்தந்தவர்களென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிந்துப்பிட்டி பிரதேசத்திலிருந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களில் 50 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவர்களில் எவருக்கும் நோய் தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் மேலும் 22 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்றைய தினம் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. 176 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக இரண்டாயிரத்து 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இராணுவத்தினரால் நடத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து இதுவரை 17 ஆயிரத்து 764 பேர் வெளியேறியுள்ளனர். நாட்டில் செயற்படும் 50 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தொடர்ந்தும் 6 ஆயிரத்து 200 பேர் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2020 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க