நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பொளத்த விகாரைகளில் பெரும் எண்ணிக்கையிலானோர் வழிபாடுகளில் பங்கேற்பதை காணக்கூடியதாக இருந்தது. ஜயஸ்ரீ மகாபோதி உள்ளிட்ட புனித தலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இன்று காலை முதல் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று சிறப்பு மிக்க மிஹிந்தலை மிஹிந்து ஆராண்யவுக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
குறித்த மத வழிபப்பாட்டு தலம் கி.பி 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளுக்குயதாகும். ஆராண்யவில் உள்ள வணக்கத்திற்குறிய கலபான சுமன தேரரை சந்தித்த ஜனாதிபதி அவருடன் உரையாடினார். அதன் போது ஜனாதிபதிக்கும் வருகை தந்நதிருந்த ஏனைவர்களுக்கும் நல்லாசி வேண்டி மஹாசங்கத்தினரால் பிரித் ஓதப்பட்டது. அமாதம் சிசில தர்ம போதனையில் 200 ஆவது போதனை தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் அயலவர்களும் பங்கேற்றனர்.
இதேவேளை தங்காலை நகரில் நிர்மானிக்கப்ட்ட ஆராக்கிய தனியார் வைத்தியசாலை ஒன்றை பிரதமர் இன்று திறந்து வைத்தார். அங்கவீனமுற்றவர்களுக்கான சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோள்கள் என்பவற்றையும் பிரதமர் அதன் போது வழங்கிவைத்தார். அதன் போது கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இலங்கை உப்பு உற்பத்திநிறுவனத்தின் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அதற்கான காசோலையை வழங்கிவைத்தார்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/74228910_1645750778923564_1514139812826530426_o.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/106472978_1645750648923577_6503402601396698358_o.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/106472978_1645750648923577_6503402601396698358_o.jpg”]
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/07/106496665_1645750702256905_4446571238307000924_o.jpg”]