fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2020 12:32

கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீள கட்டியெழுப்புவதற்கென 53 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பாதிப்புக்களை எதிர்கொண்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கென நிதி வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்பும் நோக்கில் நூற்றுக்கு 4 வீத வருடாந்த வட்டி அடிப்படையில் சௌபாக்கியா கொவிட் 19 புனரமைப்பு மற்றும் கடன் திட்டம் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருடாந்த புரள்வு ஒரு பில்லியன் ரூபாவுக்கும் குறைந்த சுயதொழில் மற்றும் தனிநபர் வரத்தகம் உள்ளிட்ட எந்தவொரு வியாபாரத்திற்கும் கடன் திட்டத்தின் கீழ் நிவாரணத்தை பெறமுடியுமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

6 மாதங்கள் அடங்கிய நிவாரண காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களுக்கு கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். இதேவேளை குறித்த ஒரு பில்லியன் ரூபா வருடாந்த புரள்வு கட்டுப்பாடானது சுற்றுலா, ஏற்றுமதி அதனுடன் தொடர்புடையய சேவை வழங்கல் வியாபாராங்களுக்கு கிடைக்கப்பெறாதென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடன் யோசனை திட்டத்தின் கீழ் அதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ம் திகதி வரை மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2020 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo