கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக வேலைகளை இழந்தவர்களில் 5 மில்லியன் நபர்கள் மீண்டும் தொழில்களை பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கொவிட் 19 தொற்றினால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் 22 மில்லியனுக்கும் அதிகமானோர் தொழில்களை இழந்துள்ளனர். தொடர்ந்தும் குறித்த நிலை நீடிக்குமென துறைசார் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.