fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2020 10:29

ருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமமானதென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். ருவென்றி – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கவுள்ளன.

எனினும் கொரோனா நிலைமை காரணமாக தொடரை நடத்துவது சாத்தியமற்றதென அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை ஏற்கனவே அறிவித்துள்ளது. எனினும் ஐசிசி இதுவரை இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை.

இந்நிலையில் 16 அணிகளையும் தனிமைப்படுத்தி, குறித்த அணிகள் செல்லும் இடங்களை திட்டமிடுதல், கடினமான பணியென மைச் ஹசி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் ருவென்றி – 20 உலக கிண்ண தொடரை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பதே சிறந்ததென மைக் ஹசி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2020 10:29

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo