fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 18:32

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 18:32

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo