fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜிந்துபிட்டி கொரோனா நோயாளி சமூகத்திலிருந்து இனங்காணப்படவில்லையென டொக்டர் ஜாசிங்க தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 12:50

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்து இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சமூகத்தில் இருந்து இனம் காணப்பட்ட தொற்றாளர் அல்லவென சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்ட நபர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்து நேற்று கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டார். இவர் இந்தியாவில் இருந்து வருகை தந்த இலங்கை கரையோர பாதுகாப்பாளர் என டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்பத்தல் நடவடிக்கையை நிறைவு செய்தன் பின்னர் அவர் தொற்றாளர் அல்ல என உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்சோதனையின் போதே அவர் தொற்றக்கு இலக்காகியமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர் சமூகத்தில் இருந்து இனம் காணப்படட்ட தொற்றாளர் அல்ல எனவும் தனிமைப்படுத்தல் காலக்கட்டத்திற்குள் இனம் காணப்பட்ட தொற்றாளர் எனவும் டாக்டர் அணில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார் தொற்று நோயியல் நிறுவனத்தின் வைத்திய நிபுனர் சுதத் சமரவீரவும் இது தொடர்பாக விளக்கமளித்தார்.

( நாம் இது எதிர்பார்க்கின்ற விடயமாகும். இதனாலேயே இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னரும் மேலும் இரண்டு வாரங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறும் கூறுகிறோம். எமது ஆய்வுகளின் முன்னேற்றகரமான செயற்பாட்டையே இது வெளிகாட்டுகின்றது. தனிமைப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் பி.சி.ஆர் சோதனையில் நெகட்டிவ்வாக இருந்த போதிலும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சோதனையின் போது அது பொசிடிவ்வாக மாறலாம். சமூகத்தில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் வெளிச் சமூகத்தில் தொற்றாளர்கள் எவரும் இதுவரை இனங்காணப்படவில்லை. எனினும் இது துரிதமாக பரவுவதற்கான அச்சுறுத்தலாக இல்லையென கூறிக்கொள்கிறோம். சட்ட விரோதமாக வள்ளங்கள் மூலம் வருகை தருபவர்கள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. அவ்வாறானவர்கள் மூலம் இத்தொற்று பரவ கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. கொவிட்ட 19 தொற்றில் இருந்து எமது நாடு நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் வரை இதுகுறித்து நாங்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.)

இதேவேளை நாட்டில் இருந்து இனம் காணப்பட்ட மொத்த தொற்றாரள்களின் எண்ணிக்கை 2066 ஆகும். இவர்களில் 1827 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறியுள்ளனர். இவர்களில் 877 பேர் கடற்படை உறுப்பினர்களாவர் நேற்றைய தினத்திலும் பூரண குணமடைந்த 29 கடற்படை உறுப்பினர்கள் வெளியேறினர் தற்போது வைத்தியசாலைகளில் 228 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 58 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

 

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க