அமெரிக்காவில் புதிதாக 48 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து பல்வேறு தரப்பினரும் தொழி;ல்களை இழக்க நேரிட்டுள்ளது. இந்நிலையிலேயே புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல வருடகாலமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்களை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த மாதத்தில் மாத்திரம் 48 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் தொழில்களை இழந்த ஏனையவர்களுக்கும் தொழில் பெற்றுக்கொடுக்கப்படுமென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.