fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ISIS அமைப்புடன் தொடர்புப்பட்ட ஒருவர் குறித்து மங்கள, சாகல ஆகியோருக்கு அறிவித்த போதிலும் பயன்கிடைக்கவில்லையென ஆணைக்குழுவில் அம்பலம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 19:25

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் ஐஎஸ்அமைப்புடன் தொடர்புப்பட்ட நபர் ஒருவர் தொடர்பாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சட்டம் சமாதானம் தொடர்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரை சந்தித்து பிரத்தியேகமாக அவர்களை அறிவுறுத்தியதாக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் மொஹிதீன் அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இதனை தெரிவித்தார். தான் இதுபற்றி விளக்கமளிப்பதற்காக பாராளுமன்ற தெரிவு குழுவில் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனக்கு உயர்தர கல்வியை போதித்த ஆசிரியை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது 23 வயது மகனான ஆசிக் என்பவர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக அறிவித்ததாகவும் முன்னாள் நீதிபதி கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் தான் அறிந்த தகவல்களை கூறியதன் பின்னர் அவற்றை பதிவு செய்து கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் சாட்சி மேலும் தெரிவித்தார். எனினும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும் வரை தன்னிடம் எதனையும் வினவவில்லையென முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். தான் தகவல் வழங்கிய சந்தர்ப்பத்தில் செயற்பட்டிருந்தால் இந்த பயங்கரவாத வலையமைப்பை முற்றாக ஒழித்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 19:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க