Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
உற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்
Related Articles
நெல் தவிர்ந்த ஏனைய பயிர் உற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை வகுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. உரத்தை விவசாயிகளுக்கு தாமதமின்றி விநியோகிக்கும் நடைமுறை தொடர்பில் திட்டங்களை வகுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 88 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் அடையாளம் காணப்பட்ட 16 பயிர்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு தேவையான இரசாயான உரத்தை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டமொற்று வகுக்கப்படவுள்ளது. மகாவலி விவசாயம், நீர்ப்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ இது குறித்தான திட்டங்கள் அடங்கிய யோசனை யொன்றை அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அதுதொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
சிறியளவிலான விவசாய உற்பத்திகளுக்கு சேதன பசளை பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும்பட்சத்தில் மாத்திரம் குறைந்தளவிலான இரசாயன உரத்தை கொள்வனவு செய்ய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.