fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் இரு நாட்களுக்குள் வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுமென அரச அச்சகம் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 13:35

எதிர்வரும் இரு நாட்களுக்குள் வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுமென அரச அச்சகம் தெரிவிப்பு

எதிர்வரும் இரு நாட்களுக்குள் வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுமென அரச அச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் ஆணைக்குழுவில் தபால்மூல வாக்களிப்பிற்கான செயற்பாடுகள் நிறைவடைந்ததையடுத்து வாக்குச்சீட்டுக்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுமென அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பிற்கென ஐய்யாயிரம் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். நீண்டகால கண்காணிப்பாளர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். தபால்மூல வாக்களிப்பு கண்காணிப்பு பணிகளுக்கெனவும் குழுவொன்று ஈடுபடுத்தப்படுமென பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கென 15 ஆயிரத்து 200 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் வாக்குச்சீட்டுக்களை தபால் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கையும் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்த்தன தெரிவித்தார்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்களும் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 13:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க