fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் குழு சீனா பயணம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:44

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவொன்று சீனாவுக்கு செல்லவுள்ளது. அடுத்த வாரம் குறித்த குழு சீனா செல்லுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஜெனிவா நகரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் கண்டறிந்தால் மாத்திரமே அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸின் தோற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே அது குறித்து ஆராய உலக சுகாதார ஸ்தாபனம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க