ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் விளக்கமளித்துள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதமளவில் நிறைவடையவுள்ளது. அதை மேலும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
யோசனையொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.