fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனாவை அடுத்து சீனாவில் புதிய வகை காய்ச்சலொன்று பரவக்கூடிய அபாயம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:36

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாக அடையாளப்படுத்தப்படும் சீனாவில் புதிய வகை காய்ச்சலொன்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பன்றிகளின் ஊடாக பரவும் இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்கும் தொற்றக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு சீனாவில் அடையாளம் காணப்பட்ட பன்றிக்காய்ச்சலுக்கு சமமான அறிகுறிகள் தென்படுகின்ற போதிலும், புதிய மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய வைரஸுக்கு G4 EA H 1 N 1 என பெயரிடப்பட்டுள்ளது. நபரொருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், அவ்வாறு பரவும் பட்சத்தில் உலகளாவிய ரீதியில் இந்த தொற்று பரவக்கூடும் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க