fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லீஸிங் மற்றும் நிதி நிறுவனங்களின் மோசடி தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை இன்று மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:34

லீஸிங் மற்றும் நிதி நிறுவனங்களின் மோசடி தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை இன்று மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது. 60 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோசடி தொடர்பில் ஆராயும் மூவர் அடங்கிய குழு தெரிவித்துள்ளது. பெரும்பாலான முறைப்பாடுகள் தனிநபர் முறைப்பாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி தொடர்பான முறைப்பாடுகள், கையக்கபடுத்தல், சட்டவிரோதமான முறையில் லீஸிங் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி செல்வது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முறைபாடுகளை ஏற்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அறிக்கையை இன்றைய தினம் மத்திய வங்கி ஆளுநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லீஸிங் மற்றும் நிதி நிறுவனங்களின் மோசடி தொடர்பில் ஆராயும் மூவர் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் டபிள்யு. டி லக்ஷ்மனினால் நியமிக்கப்பட்ட குறித்த குழவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி செயலாளர் ஹரிகுப்தா ரோஹண வீர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க