fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:33

இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று தொடக்கம் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கிரிக்கட் விளையாட்டு போட்டிகளை மீள படிப்படியாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘கிரிக்கட் தென் ஆபிரிக்கா’ வின் வேண்டுகோளுக்கு அமைய பயிற்சி மற்றும் விளையாட்டு திட்டங்களுக்கான அனுமதியினை தென் ஆபிரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கமைய, ‘கிரிக்கட் தென் ஆபிரிக்கா’ மீண்டும் தமது பயிற்சி நடவடிக்கைகளை நாளை தினம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளை, ஜூன் மாதம் 27ம் திகதி நடைபெறவிருந்த முக்கோண போட்டிகளை ‘கிரிக்கட் தென் ஆபிரிக்கா’ பிற்போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:33

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo