fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“கொவிட் 19 பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு”

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:10

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்பு விடயங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு பிரதிநிதிகளும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க