fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்…

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 14:48

இங்கிலாந்து சகல துறை வீரர் பென்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து அணியின் 81 வது டெஸ்ட் அணி தலைவராக செயற்படவுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணி தலைவராக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது போட்டி எதிர்வரும் 8ம் திகதி சவுத் எம்டனில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தலைவரான ஜோருட் இப்போட்டில் விளையாடமாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவிக்கு 2வது குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் அங்கு சென்றுள்ளார். இதனால், அணியோடு இணைவதற்கு முன்னர், அவர் ஒருவார காலம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். இதன்காரணமாக முதல் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலையுள்ளது. அதன் அடிப்படையிலேயே அணியின் உப தலைவரான பென்ஸ் ஸ்டொக்ஸ் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 14:48

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo