fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜித்த தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 14:54

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனுவை ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணிகள் மீள வாபஸ் பெற்ற நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுப்படி செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகசந்திப்பு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின்னர், ராஜித்த சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதற்கமைய தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறித்த மேன்முறையீட்டு மனுவை தாக்கதல் செய்திருந்தார். எனினும் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதால் இம்மனுவை தொடர்ச்சியாக பேணாமல் அதனை வாபஸ் பெற தீர்மானித்ததாக ராஜித்த சேனாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க