சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி
Related Articles
சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க முடியும். கொவிட் 19 வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில், சுகாதார அணுகுமுறைகள் சகல சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.