fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆகஸ்ட் 6ம் திகதி இரவு 10 மணிக்குள் பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:36

ஆகஸ்ட் 6ம் திகதி இரவு 10 மணிக்குள் பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகள்

2020 ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் வாக்கெண்ணும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். அதற்கமைய, முதலாவது தேர்தல் முடிவு 6ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கபடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்ததல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அது குறித்து ஊடகங்கள் அறிவிக்கும்போதே மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். அதற்கமைய இரவு 10 மணியாகும் போது தேர்தல்கள்முடிவுகள் அனைத்தையும் வெளியிடக்கூடியதாக இருக்குமென அவர் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்களை உள்ளடக்கிய அஞ்சல் பொதிகள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவற்றை தபால் இடும் பணிகள் இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு இடம்பெறுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால் திணைக்களத்தின் சகல ஊழியர்களதும் விடுமுறைகள் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையயே, பொது தேர்தலக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14, 15, 16 மற்றும் 17ம் திகதிகளில் இடம்பெறும். அன்றைய தினத்தில் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க