fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளன…

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 20:40

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. வாக்களிப்பதற்காக வழங்கப்படும் காலம் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது. மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 6 ம் திகதி இரவு 10 மணியாகும் போது பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் விருப்பு வாக்குகளை வெளியிடும் நடவடிக்கைக்கு அதிக காலம் தேவைப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கென 3 தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். ஜுன் 30, ஜுலை 1 மற்றும் ஜுலை 2 ம் திகதிகளில் இவை பொறுப்பேற்கப்படுமென அவர் தெரிவித்தார்.

இதேவேளை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்கென விசேட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிபடையைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடக்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவோடு இணைந்து இலங்கை பொலிஸ் திணைக்களம் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்களை வழிநடத்தும் நோக்கில் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 20:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க