fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராகமாட்டார்”

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 19:35

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்துள்ள மனுதொடர்பான எதிர்ப்புக்களை எதிர்வரும் ஜூலை 31 ம் திகதி முன்வைக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்யுமாறு கோரி குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதில் பொலிஸ் மா அதிபர் சார்பாக சட்டமா அதிபர் இவ்வழக்கில் ஆஜராகமாட்டார் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே இதற்கு காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்சைக்குரிய குரல் பதிவு சம்பவம் தொடர்பிலேயே நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 19:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க