fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 18:12

21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தைய்யா முரளிதரண் பெயரிடப்பட்டுள்ளார். பிரபல்யாமான விஸ்டன் கிரிக்கட் சஞ்சிகையானது உலகின் முன்னணி கிரிக்கட் ஆய்வு நிறுவனமான கிரிக்விஸ்ஸுடன் இணைந்து 21 ம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முத்தையா முரளிதரண் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 2000 ம் ஆண்டிலிருந்து தரவுகள் சேர்க்கப்பட்ட நிலையில் 2020 ம் ஆண்டு வரையான தரவுகளை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2010 ம் ஆண்டு வரை முத்தையா முரளிதரண் 85 டெஸ்ட் போட்டிகளில் 573 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இக்காலப்பகுதியில் அவரை விட முன்னிலையில் இருப்பவர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகும் அவர் 2000 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை 151 போட்டிகளில் 584 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்தையா முரளிதரண் மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அவர் ஓய்வுபெற்ற 2010 ம் ஆண்டு வரையான காலத்தில் அவரது பந்து வீச்சு சராசரி 20.92 ஆகும். இக்காலப்பகுதியில் 50 தடவைகள் அவர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

மேலும் 2000 ம் ஆண்டுக்கு பின்னர் அவர் விளையாடிய 84 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததோடு 17 போட்டிகளை சமன் செய்துள்ளது. குறித்த ஆய்வறிக்கையினை அடிப்படையாக வைத்து 21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் என்ற மகுடத்தை முத்தைய்யா முரளிதரணுக்கு சூட்டியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 18:12

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo