மாலைதீவில் சிக்குண்டிருந்த இலங்கையர்கள் 179 பேர் இன்று நாட்டிற்கு வருகை தந்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைவாக குறித்த 179 இலங்கையர்களும் மாலைதீவிலிருந்து மத்தளை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மத்தளை விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை அவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மாலைதீவில் சிக்கியிருந்த 179 பேர் நாடு திரும்பினர்
படிக்க 0 நிமிடங்கள்